×

ஆசிய கோப்பை டி20 பைனல் பானுகா ராஜபக்ச அபார ஆட்டம்

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான ஆசிய கோப்பை டி20 இறுதி போட்டியில், பானுகா ராஜபக்சவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆஸம் முதலில் பந்துவீச முடிவு செய்தார். தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் 0, பதும் நிசங்கா 8 ரன்னிலும், அடுத்து வந்த குணதிலகா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, இலங்கை 36 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.தனஞ்ஜெயா 28 ரன், கேப்டன் தசுன் ஷனகா 2 ரன்னில் வெளியேற, 8.5 ஓவரில் 58 ரன்னுக்கு 5 விக்கெட் என மேலும் சரிவை சந்தித்த அணியை, பானுகா ராஜபக்ச - ஹசரங்கா ஜோடி போராடி மீட்டது.  

இருவரும் 6வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தனர். ராஜபக்ச 35 பந்தில் அரை சதம் அடித்தார். ஹசரங்கா 36 ரன் (21 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ராவுப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. கடைசி 5 ஓவரில் அந்த அணிக்கு 53 ரன் கிடைத்தது. ராஜபக்ச 71 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), சமிகா கருணரத்னே 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் 3, நசீம், ஷதாப், இப்திகார் தலா 1 விக்கெட் எடுத்தனர்.  இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 171 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.


Tags : Asia Cup T20 ,Bhanuka Rajapaksa , Asia Cup T20 Final Bhanuka Rajapaksa's great performance
× RELATED ஆசியக்கோப்பை டி20 தொடர் சூப்பர்...